பசில் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை சட்டவிரோதச் சொத்துக்கள் பிரிவுக்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மேம்பாட்டுப் பணியக நிதி முறைகேடு வழக்கில், அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.





