சேற்று மண்ணில் உயிர்பிழைத்தவர்களை தேடி தொடரும் பயணம்
நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி மேலும் 16 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 540க்கும் மேற்பட்டோர் காணாமல்போயுள்ளதாகவும் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது.
546 பேரில், 261 பேர் 23 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டினர் என்றும், அவர்களில் 15 பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் எல்லையில் உள்ள சேறு மற்றும் இடிபாடுகளை இன்னும் சல்லடை போட்டுத் தேடி வருகின்றனர், ஆனால் இதுவரை உயிருடன் யாரும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதற்கிடையில், நிலச்சரிவு இடிபாடுகளுக்கு மத்தியில் உருவான ஏரியால் ஏற்பட்ட ஆபத்து தற்போதைக்கு குறைந்துள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும் மேலும் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் தொடர்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர், மேலும் மீட்புக் குழுக்களை எச்சரிப்பதற்காக எல்லையில் கண்காணிப்பு நிலையங்களை அமைத்துள்ளனர்.




