இலங்கை

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது இருக்கை பட்டிகள் அணிவது இன்றுமுதல் கட்டாயம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்களின் முன் மற்றும் பின் இருக்கைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இருக்கைப் பட்டைகள் அணிவதைக் கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்   பிமல் ரத்நாயக்க இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

தொழிற்சாலையிலிருந்து இருக்கைப் பட்டைகள் பொருத்தப்படாத பழைய வாகனங்களுக்கு அந்த வசதியை வழங்குவதற்காக, அரசாங்கம் நான்கு முறை வர்த்தமானி அறிவிப்புகள் மூலம் கால அவகாசம் வழங்கியிருந்ததாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதாகவும் குறிப்பிட்டார்.

இன்றுடன் கால அவகாசம் முடிவடைவதால், இன்று நள்ளிரவுக்குப் பிறகு இருக்கைப் பட்டைகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மட்டுமே அதிவேக நெடுஞ்சாலைகளில் சட்டப்பூர்வமாக இயக்க அனுமதிக்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்