ஈரானுக்கு எதிராக மாபெரும் தாக்குதலுக்கு திட்டம் – ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
ஈரானுக்கு எதிராக ஒரு “பெரும் தாக்குதலை” நடத்துவதா இல்லையா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதல், இதுவரை கண்டிராத தாக்குதல்களை விடப் பெரியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “நான் ஒரு பெரும் தாக்குதலைப் பற்றி பரிசீலித்து வருகிறேன். இதுவரை நாம் கண்டிராத எதையும் விடப் பெரியது. நான் ஒரு முடிவை எடுப்பதற்கு மிக அருகில் இருக்கிறேன். நாங்கள் அதற்கு முழுமையாகத் தயாராக இருக்கிறோம்,” என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஈரானுக்கு எதிரான இந்த பெரும் தாக்குதல் குறித்த முடிவிற்கான ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவை ட்ரம்ப் குறிப்பிடவில்லை.
மேலும், தான் கேட்டால் இஸ்ரேலும் இந்த நடவடிக்கையில் இணையும் என்றும், அவ்வாறு இணைந்தால், ஈரானிடமிருந்து பதிலடித் தாக்குதலை அவர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறினார்.
கடந்த இரண்டு வாரங்களாக அமெரிக்கப் படைகள் ஈரானிய இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்ற நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




