இலங்கை

ஆற்றங்கரைக்கு அருகில் கரையொதுங்கிய மனிதத் தலை – பொலிஸார் தீவிர விசாரணை

இலங்கை – மொரட்டுமுல்லாவில்  தச்சுப் பட்டறைக்குப் பின்னால்  உள்ள ஆற்றங்கரைக்கு அருகில்  துண்டிக்கப்பட்ட மனிதத் தலையொன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.

தச்சுப் பட்டறையின் உரிமையாளர் குறித்த தலையை அவதானித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதற்கமைய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை (STF) தலையை கைப்பற்றியதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மொரட்டுவ பதிலாள் நீதிபதியும் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

குறித்த தலையானது மிகவும் சிதைந்த நிலையில் இருந்ததாகவும், விலங்குகளால் பகுதியளவு உண்ணப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இறந்தவரின் அடையாளம் மற்றும் தலை கண்டெடுக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

மொரட்டுமுல்லா பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

 

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்