செய்தி தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ரூ.4,12,481 மதிப்பிலான வேளாண் கருவிகள் வழங்கப்பட்டது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் மாவட்ட
ஆட்சித் தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினர்.

மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 3 விவசாயிகளுக்கு ரூ.3,50,681 மதிப்பிலான பயிர் கடன்களையும், 1 விவசாயிக்கு ரூ.56,000 மதிப்பிலான கால்நடை பராமரிப்பு கடன்களையும் மற்றும் 1 விவசாயிக்கு ரூ.5,800 விசை தெளிப்பான் கருவியும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.சிவருத்ரய்யா, மண்டல இணை பதிவாளர் பா.ஜெயஸ்ரீ,  மண்டல வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் வேளாண்மை கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி