உலகம் செய்தி முக்கிய செய்திகள்

பங்களாதேஷ் ஜனாதிபதி ராஜினாமா

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை 'ராய்ட்டர்ஸ்' செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

பதவியிழந்த முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய ஆதரவாளரான பங்களாதேஷ் ஜனாதிபதி முகமது ஷஹாபுதீன், தமது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே வெள்ளிக்கிழமை ராஜினாமா செய்யவுள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் வியாழக்கிழமை ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

நீதிமன்றத் தண்டனையைத் தொடர்ந்து, நாடு கடத்தப்பட்ட நிலையிலிருந்து சரணடைவதற்காகத் தான் தாயகம் திரும்புவதாக ஹசீனா அறிவித்த சில நாட்களில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாட்டின் தலைவராகவும், முப்படைத் தலைமைத் தளபதியாகவும் இருக்கும் ஹாபுதீனின் இந்த ராஜினாமா, ஷேக் ஹசீனா திட்டமிட்டுள்ள தாயக வருகைக்கு ஐந்து மாதங்களுக்கு முன்பாக, உயர் பதவிகளில் அவருக்கு எந்தவொரு ஆதரவாளரும் இல்லாத நிலையை உருவாக்கும்.

2024-ஆம் ஆண்டு மாணவர்கள் நடத்திய தீவிரப் போராட்டத்தைத் தொடர்ந்து ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதிலிருந்து, அவரது ‘அவாமி லீக்’ கட்சி தடை செய்யப்பட்டுள்ளதுடன், அதன் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.

ஷஹாபுதீனின் ராஜினாமாவிற்கான காரணத்தை அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி