சிறப்பு மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொது கலந்தாய்வு!
2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பொது கலந்தாய்வு நாளை (06) நடைபெறும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவிக்கிறது.
அதன்படி, இது தொடர்பாக வாய்மொழிக் கருத்துக்கள் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் காலை 08.30 மணி முதல் பிற்பகல் 03.00 மணி வரை பெறப்படும்.
இந்தப் பொது கலந்தாய்வானது, 2002 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுச் சட்டத்தின் 17 ஆம் பிரிவு மற்றும் 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) 29(10) ஆம் பிரிவின்படி நடத்தப்படுகிறது.




