அமெரிக்க – இந்திய இராணுவ வீரர்கள் கூட்டுப் பயிற்சி
இந்தியாவும் அமெரிக்காவும் உத்தரகாண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.
இரு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், இரு தரப்பிலிருந்தும் சுமார் 600 இராணுவ வீரர்கள் பங்கேற்பார்கள்.
மலைப்பாங்கான மற்றும் அரை மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் இராணுவத் திறன்களை மேம்படுத்துவதே இந்தப் பயிற்சியின் நோக்கம் என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தப் ராணுவப் பயிற்சியில், கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக ட்ரோன்கள் மற்றும் தானியங்கி அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தப் ராணுவப் பயிற்சியானது, இரு ராணுவங்களும் தந்திரங்கள், நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்ளவும், பல்வேறு நிலப்பரப்புகள் மற்றும் செயல்பாட்டுச் சூழல்களில் ஒருங்கிணைப்பதன் மூலம் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தவும் ஒரு வாய்ப்பை வழங்கும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.




