ஐரோப்பா

குடிபோதையில் விளையாடிய விபரீத விளையாட்டால் பலியான பெண்!

பிரான்சில், குடிபோதையில் ஆணும் பெண்ணும் விளையாடிய விளையாட்டு விபரீதமானது.

சனிக்கிழமையன்று, பிரான்சிலுள்ள Dordogne பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில், மூன்று பிள்ளைகளின் தாயாகிய 47 வயது பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.அதைத் தொடர்ந்து, பயங்கரமான போதையிலிருந்த 55 வயது ஆண் ஒருவர் பொலிஸில் சரணடைந்தார்.

விசாரணையின்போது, தாங்கள் விளையாடிய விளையாட்டு ஒன்றே அந்தப் பெண்ணின் உயிரைப் பறித்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.

அதாவது, வெள்ளிக்கிழமை இரவு, சிலர் ஒரு பார்ட்டியில் பங்கேற்றுள்ளார்கள். குடிபோதையிலிருந்த நிலையில், அந்தப் பெண் குண்டு துளைக்காத உடை ஒன்றை மார்பில் அணிந்துகொள்ள, அந்த ஆண் தனது வேட்டைத் துப்பாக்கியால் அந்தப் பெண்ணை சுட்டுள்ளார்.

ஆனால், அந்தப் பெண்ணின் வயிற்றில் குண்டு பாய, அவர் உயிரிழந்துவிட்டார். அசாதாரணமான இந்த வழக்கில், துப்பாக்கியால் சுட்ட நபர் மீது இன்று குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்