இலங்கை

மாகாண சபைத் தேர்தல் நடக்குமா?

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுவதாக முன்வைக்கப்படும் எதிரணிகளின் குற்றச்சாட்டை சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அடியோடு நிராகரித்துள்ளார்.

“அடுத்த வருடம் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும். எதிரணிகள் கூட்டணி வகுத்து வந்தால்கூட ஆளுங்கட்சியே வெற்றிநடைபோடும். எதிரணிகள் மண்கவ்வும் ” எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கவிழாது, மக்கள் சக்தி எமக்கு இருக்கின்றது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

மாகாணசபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தாலும் தேர்தல் முறைமை தொடர்பில் குழப்பம் நீடிக்கின்றது.

தேர்தலுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் தேர்தல் முறைமைதொடர்பில் நாடாளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்காக பிரதமர்தலைமையில் குழுவொன்றை அமைக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்