இலங்கை

இலங்கையில் இருந்து சென்ற விமானத்திற்கு ஏற்பட்ட நிலை

ஜப்பானில் உள்ள நரிட்டா நோக்கிப் புறப்பட்ட இலங்கை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இந்த விமானம் தரையிறங்கியதாக கூறப்படுகின்றது.

“A 330-300” ஏர்பஸ் ரக விமானம் 301 பயணிகளுடன் நேற்று இரவு 8.20 மணியளவில் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.

எனினும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 02 மணித்தியாலங்கள் 25 நிமிடங்களுக்குப் பின்னர் விமானம் மீண்டும் விமான நிலையத்தில் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு காயம் ஏற்படவில்லை என்று விமான நிலைய செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

பயணிகளை வேறு விமானங்கள் மூலம் ஜப்பானில் உள்ள நரிடாவிற்கு அனுப்பு நடவடிக்கை எடுத்ததாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்தார்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்