இலங்கை

20000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டாரா, களுத்துறையில் உயிரிழந்த மாணவி?

களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவியை பிரதான சந்தேகநபருக்கு விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடம் 16 வயதுடைய பாடசாலை மாணவியை 20000க்கு விற்பனை செய்யுமாறு தனது தோழியுடன் விடுதியில் இருந்த இளைஞன் (22) யோசனை கூறியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பொலிஸாரின் சந்தேகத்தின்படி பிரதான சந்தேக நபரிடம் குறித்த மாணவியை விற்பனை செய்தமைக்காக 22 வயதுடைய இளைஞன் இந்தத் தொகையில் ஒரு பகுதியைப் பெற்றுள்ளார்.

மே 06 அன்று  களுத்துறையில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் 16 வயது சிறுமியின் நிர்வாண சடலம் கண்டெடுக்கப்பட்டது. குறித்த மாணவி ஐந்து மாடி ஹோட்டலின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து களுத்துறை இசுரு உயன பிரதேசத்தில் வசிக்கும் தனுஷ்க கயான் சஹபந்து என்ற 29 வயதுடைய இளைஞர் 09ஆம் திகதி கைது செய்யப்பட்டார். எவ்வாறாயினும் முதற்கட்ட விசாரணைகளின் போது  சந்தேக நபர் அனைத்து கொலைக் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்