டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளை ஜெர்மனியில் நிலைநிறுத்த அமெரிக்கா பச்சைக்கொடி
டோமஹாக் குரூஸ் ஏவுகணைகளை கொள்வனவு செய்து அதனை நிலைநிறுத்துவதற்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் ஒன்றை எட்டியுள்ளதாக ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) தெரிவித்துள்ளார். பெர்லினில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக, அங்காராவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டின் போது அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இந்த உச்சிமாநாடு தனது எதிர்பார்ப்புகள் அனைத்தும் விஞ்சிவிட்டதாகவும் மெர்ஸ் தெரிவித்துள்ளார். “இதன் மூலம், நமது பாதுகாப்பில் உள்ள ஒரு […]




