இலங்கை

அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட ஐக்கிய மக்கள் சக்தி தயார்!

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தால், அதன் பின்னர் உருவாகும் அரசாங்கத்தின் கீழ் அவருடன் இணைந்து செயற்பட தயார் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் இணைந்து கொள்ளுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பு விடுத்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா இவ்வாறு கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் சஜித் பிரேமதாசவை பிரதமராக முடியும் எனவும், இவ்வாறான பின்னணியில் ஆட்சி அமைக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு செய்யாமல் மக்களால் விரட்டியடிக்கப்பட்ட குழுவுடன் இணைந்து நிற்க முடியாது எனவும் ஹர்ஷன ராஜகருணா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்