பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்து!
																																		பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இந்து வித்தியாலயத்திற்கு அருகில் இரண்டு பஸ்கள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து மவுண்ட் நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது.
வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்று திடீரென வீதியில் புகுந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்பதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 12 times, 1 visits today)
                                    
        



                        
                            
