இலங்கை

திருகோணமலை- ஒன்றுக்கொன்று மோதிய மோட்டார் வண்டிகள் – ஒருவர் பலி,ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!

திருகோணமலை -சேறுவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சேருவில-காவன் திஸ்ஸபுர பகுதியில் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டு வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் அவருடன் சென்ற சக நண்பரை வீட்டுக்கு முன் இறக்குவதற்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தியபோது பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த சக நண்பர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதினாலேயே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் அதே பகுதியில் வசித்து வரும் குலங்கமுவே கெதர குலரத்ண (56) என்பவரை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சேறுவில திடீர் மரண விசாரணை அதிகாரி எஸ்.எச். குணரத்ன சென்று பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதேவேளை அடைந்த மற்றுமொருவர் சேருநுவர பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் சேறுவில பொலிஸார் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்