பொழுதுபோக்கு

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனிக்கு பதிலாக கமிட் ஆகிய தொகுப்பாளனி..

எதிர்நீச்சல் கதையின் இரண்டாம் பாகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஜனனி விலகியதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு போட்டு இருந்தார்.

இதனை அடுத்து தற்போது வந்த தகவலின் படி ஜனனி கதாபாத்திரத்திற்கு பதிலாக, சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய தொகுப்பாளனி மற்றும் ஜீ தமிழில் சீரியலில் புதுப்புது அர்த்தங்கள் நாடகத்தில் நடித்த பார்வதி நடிக்கப் போகிறார்.

மூன்றாவது முறையாக சன் டிவியில் சீரியலை கொண்டுவரும் திருச்செல்வத்துக்கு இந்த முறையும் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப ஆர்டிஸ்ட்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து வருகிறார்.

அந்த வகையில் சீரியலுக்கு இன்னும் அதிக அளவில் மெருகேற்றும் விதமாக வில்லன் கேரக்டருக்கு ஏற்ற ஆர்டிஸ்ட்களை தேடிக் கொண்டு வருகிறார்.

எந்த ஆர்டிஸ்ட் வந்தாலும் அதற்கு ஏற்ற மாதிரி நடிப்பை வாங்குவதில் திருச்செல்வத்துக்கு ஈடாக யாரும் கிடையாது. உதாரணமாக கோலங்கள் சீரியலில் ஆதி கேரக்டர் மற்றும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தை மறக்கவே முடியாது. அந்த வகையில் இப்பொழுது வர இருக்கும் புது நாடகத்திலும் மறக்க முடியாத அளவிற்கு ஒரு வில்லன் நிச்சயமாக இடம் பிடிக்கப் போகிறார்.

இன்னும் கூடிய விரைவில் எதிர்நீச்சல் கதை போல் திருச்செல்வம் சன் டிவியில் என்டரி கொடுக்கப் போகிறார். ஏற்கனவே இப்பொழுது புதுசாக வந்த மூன்று முடிச்சு சீரியல் மக்களிடம் பேர் ஆதரவை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் இடத்தை பிடித்து விட்டது. அந்த வகையில் இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புத்தம் புது சீரியலுடன் எதிர்நீச்சல் இரண்டாம் பாகம் போட்டி போட தயாராகிவிட்டது.

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்