இலங்கை

ஆசிரியையின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்!

வவுனியா  ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டது.

குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மாணவனின் பெற்றோரிடம் விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன் மேலதிக விசாரணைக்காக குறித்த ஆசிரியரிடமும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்