சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென அதிகரிப்பு!
ஈரானுடனான போர் நிறுத்தத்தை அமெரிக்கா நீட்டித்ததைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் குறைந்ததால், பணவீக்கம் திடீரென அதிகரிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இன் விளைவாக இன்றைய தினம் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உச்சம் தொட்டுள்ளது.
ஏப்ரல் 13-க்குப் பிறகு இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த நிலைக்குச் சரிந்திருந்த தங்கத்தின் விலை இன்று அவுன்ஸ் ஒன்றுக்கு 0.9 சதவதம் அதிகரித்து $4,755.11 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல் வெள்ளியின் விலை 1.5 சதவீததத்தால் உயர்ந்து அவுன்ஸ் ஒன்று $77.84 ஆகவும், பிளாட்டினம் 1.5 சதவீதத்தால் உயர்ந்து $2,067.25 ஆகவும், பல்லேடியம் 1.8 சதவீதம் உயர்ந்து $1,560.31 ஆகவும் பதிவாகியுள்ளது.





