ஐரோப்பா

இங்கிலாந்தில் முடிவுக்கு வந்தது செவிலியர்களின் போராட்டம்!

இங்கிலாந்தில் செவிலியர்கள் முன்னெடுத்த வேலைநிறுத்த போராட்டங்கள் நிறைவுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் காலேஜ் ஆஃப் நர்சிங் (RCN) கடந்த மாதம் அரசாங்கம் வழங்கிய சம்பள சலுகையை நிராகரித்த பின்னர், வெளிநடப்புகளை செய்வதாக அறிவித்திருந்தனர்.

இருப்பினும், தொழிற்சங்கங்கள் தங்கள் வேலைநிறுத்த ஆணையைப் புதுப்பிக்க ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் வாக்கெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். இதில் 50 வீதத்தை அவர்கள் பெற வேண்டும்.

இந்நிலையில்,  100,000 க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்தபோது, RCN இன் 300,000 உறுப்பினர்களில் 122,000 பேர் மட்டுமே வாக்குச் சீட்டைச் சமர்ப்பித்திருந்தனர். இன்படி 43 வீதமான வாக்குகளே பதிவாகியுள்ளது.

இதனால் செவிலியர்கள் முன்னெடுத்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்