இந்தியா

30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற உயிர்நீத்த தெருநாய்!

தெரு நாயொன்று விஷப் பாம்பிடம் இருந்து 30 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த சம்பவம் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்தியாவின் ஒடிசா மாநிலம் – தீர்குலா கிராமத்தில் அமைந்துள்ள முன்பள்ளி பாலர் பாடசாலையில், குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கு மிகக் கொடிய விஷப்பாம்பு ஒன்று வந்துள்ளது.

குழந்தைகள் விளையாடும் இடத்தை நோக்கி பாம்பு செல்வதைக் கண்ட தெருநாய் ஒன்று உடனடியாக பாம்பைத் தடுத்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் பார்த்ததாக கூறியுள்ளனர்.

பாம்பும் நாயும் சண்டையிட்டதில், நாயின் முகம் உள்ளிட்ட பல பகுதிகளில் பாம்பு கடித்துள்ளது.

எனினும், பாம்பைக் கொல்லும் வரை அந்த நாயும் அமைதி அடையவில்லை.

இறுதியில் பாம்பைக் கொன்று விட்டு சில நொடிகளில், நாயும் இறந்து போயுள்ளது.

30 குழந்தைகளைக் காப்பாற்றிய அந்த நாய்க்கு நன்றி செலுத்தும் வகையில்இ தீர்குலா கிராம மக்கள் அதற்கு முறையாக இறுதிச் சடங்குகளைச் செய்துள்ளனர்.

இந்த விடயம் சமூக ஊடகங்களில் வைரலாக, குறித்த நாயின் செயலானது ஐந்தறிவு உயிர்களின் நன்றி உணர்வையும், மனிதர்களிடம் அவை கொண்டுள்ள அன்பையும் வெளிப்படுத்துவதாக அமைந்து விட்டது என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

 

Mahi

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே