இலங்கை

யாழ் இளைஞனுக்கு அதிர்ச்சி கொடுத்த காதலி

அவுஸ்திரேலியாவிற்கு காதலனை அனுப்புவதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயில் வசிக்கும் இளைஞரிடம் இவ்வாறு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கமைய, கிளிநொச்சியில் வசிக்கும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியில் வசிக்கும் தனது காதலியை பார்ப்பதற்காக குறித்த இளைஞர் வருகை தரும் சந்தர்ப்பங்களில் தனது உறவினர் ஒருவர் அவுஸ்திரேலியாவிலிருந்து தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியுள்ளார் என தெரிவித்து உரையாட செய்துள்ளார்.

நீண்ட நாட்கள் இவ்வாறு உரையாடியதன் பின்னர் காதலனை அவுஸ்திரேலியாவிற்கு அழைப்பித்துக்கொள்ள முடியும் என தொலைபேசியில் உரையாடியவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 18 இலட்சம் ரூபாய் பணத்தை யுவதியிடம் காதலன் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட தினத்திலிருந்து யுவதியின் நடத்தையில் மாற்றங்கள் ஆரம்பித்ததாகவும் அதன் பின்னர் காதல் தொடர்பும் துண்டித்துக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே காதலன் காவல் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள யுவதியை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்