இலங்கை செய்தி

வயிற்று வலியால் உயிரிழந்த சிறுவன்

வயிற்று வலி காரணமாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தர்கா நகரின் பப்புகொட, இலக்கம் 129 B இல் வசித்து வந்த பி.கே.டி. ஆதிஷா ஹன்சனா (10) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த இக்குழந்தை, தர்கா நகரிலுள்ள ஸ்ரீ ஞானசார கல்லூரியின் ஆரம்பப் பிரிவில் ஐந்து வருடங்களாகப் பயின்று வந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த அவர் வயிற்று வலி மற்றும் வாந்தி எடுத்ததாக அவரது தாயார் கூறுகிறார்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தர்கா நகர வைத்தியசாலைக்கும் களுத்துறை நாகொட வைத்தியசாலைக்கும் மாற்றப்பட்டார்.

பின்னர் பொரளை ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட போதும் குழந்தையின் நோய் கண்டறியப்படவில்லை எனவும் சிகிச்சை பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை