2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ் ரேட்டிங்ஸ்' (Moody's Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா செய்தி

இந்தியாவில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி: Moody’s நிறுவனம் கணிப்பு

  • September 19, 2026
  • 0 Comments

2026-27ஆம் நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் என உலகளவில் முன்னணி கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ் ரேட்டிங்ஸ்’ (Moody’s Ratings) புதிய கணிப்பை வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவின் வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் எனக் கணித்திருந்த மூடிஸ், தற்போது அதை 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது. 2026ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இந்தியாவின் உண்மையான GDP வளர்ச்சி ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் […]

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தியா உலகம் செய்தி

இந்தியாவுக்கு 100 சதவீத வரி: கையெழுத்திட்டார் ட்ரம்ப் ட்ரம்ப்

  • September 19, 2026
  • 0 Comments

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை வாங்கும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரை வரி (Tariff) விதிக்க வழிவகுக்கும் ரஷ்ய தடைகள் தொடர்பான சட்டமூலத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்குப் புதிய அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. குடியரசுக் கட்சி பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபையில் இச்சட்டமூலம் 262 – 159 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களில் டிரம்பின் ஒப்புதல் கிடைத்துள்ளது. வாஷிங்டனில் உக்ரைனின் தீவிர […]

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் 'புல்வெளியில் இரட்டை மலர்கள்' சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்தியா செய்தி

கட்சி பெயர், சின்னம் முடக்கம்: சட்டப் போராட்டத்தில் இறங்கினார் மம்தா

  • September 19, 2026
  • 0 Comments

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் பெயர் மற்றும் அதன் ‘புல்வெளியில் இரட்டை மலர்கள்’ சின்னத்தை முடக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தொடர்பான இரு தரப்பு கோரிக்கைகளையும் பரிசீலிக்கும்போது, ​​திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு ரீதியான கட்டமைப்பை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ளவில்லை என்று மம்தா பாஜர்ஜி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்துள்ளார். மேலும், அதிருப்தி எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அளித்த ஆவணங்கள் […]

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இலங்கை செய்தி

விபத்தில் இளம் பெண் பலி: மலையகத்தில் சோகம்

  • September 19, 2026
  • 0 Comments

நானுஓயாவில் இன்று (19.09.2026) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான குணசேகரம் திவ்யா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். தொழில் நிமித்தம் இன்று காலை நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி அவர் மோட்டார் சைக்கிளில் (இஸ்கூட்டி) பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. கட்டுநாயக்கவிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன் ஒன்று, மோட்டார் சைக்கிளுடன் […]

கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முக்கிய செய்திகள்

கிரீன்லாந்தில் ராணுவ பிரசன்னத்தை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

  • September 19, 2026
  • 0 Comments

கிரீன்லாந்தில் அமெரிக்கா தனது இராணுவப் பிரசன்னத்தை குறிப்பிடத்தக்க வகையில் விரிவுபடுத்துவதற்கும், அமெரிக்காவின் எதிரி நாடுகள் அந்தத் தீவில் சொந்தமாக இராணுவத் தளங்களைக் அமைப்பதை தடுப்பதற்கும் வழிவகுக்கும் ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா, டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகள் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) சமூக ஊடகப் பதிவில் இது குறித்து எழுதியுள்ள அமெரிக்க ஜனாதிபதி, அமெரிக்காவின் ஒப்புதல் இன்றி எதிரி நாடுகள் எதுவும் இந்தத் தீவில் முக்கியமான […]

சி.என்.என் (CNN), எம்.எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிட்டிகோ (Politico) ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடித் தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

CNN உள்ளிட்ட 3 ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகையில் தடை

  • September 19, 2026
  • 0 Comments

சி.என்.என் (CNN), எம்.எஸ் நவ் (MS NOW) மற்றும் பொலிட்டிகோ (Politico) ஆகிய ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகைக்குள் நுழைவதற்கு உடனடித் தடை விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட டிரம்ப், குறித்த ஊடகங்கள் தமது நிர்வாகத்தைப் பற்றி “தொடர்ச்சியாக பொய்களையும் புனைவுகளையும் எழுதி அல்லது செய்தி வெளியிட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். எனினும், இதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவர் வழங்கவில்லை. பின்னர் இதுவொரு […]

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க அனுமதி வழங்குவது பற்றி நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. இலங்கை செய்தி

தடுப்பு காவலை எதிர்த்து சலே ரிட்மனு: நவம்பர் 27 இல் பரிலீசனை

  • September 19, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தாக்கல் செய்த ரிட் மனுவை விசாரிக்க அனுமதி வழங்குவது பற்றி நவம்பர் 27ஆம் திகதி அறிவிப்பதாக மேல்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தனது கைது மற்றும் தடுப்புக்காவலை எதிர்த்து, சுரேஷ் சாலே இந்த ரிட் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான வாய்மொழி வாதங்களை நேற்று நிறைவு செய்த […]

சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராஜாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது குடும்பத்தினரை நேற்று நேரில் சென்று சந்தித்தார். இலங்கை செய்தி

அனோஜனுக்காக முஸ்லிம் சமூகம் ஆதரவுக் குரல்: விடுவிக்குமாறு சவூதி மன்னரிடம் கோரிக்கை

  • September 19, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவில் அனோஜன் சிவராஜாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களை அடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன், கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள அவரது குடும்பத்தினரை நேற்று நேரில் சென்று சந்தித்தார். இச்சந்திப்பின் போது அனோஜனின் தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தனது ஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்ததோடு, இச்சம்பவம் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாட நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். இது குறித்து அவரது ஊடகப் […]

தான் ஆயிரம் தடவைகள் இனவெறி அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால் தாங்கள் டந்துகொள்ளும் விதம் இனவெறி சார்ந்தது என்பதை பலரும் உணர்வதில்லை என்றும் பார்ட்செலோனா Barcelona அணியின் முன்கள வீரர் லாமின் யமால் (Lamine Yamal) தெரிவித்துள்ளார். செய்தி விளையாட்டு

1000 தடவைகள் இனவெறி தாக்குதல்: இளம் கால்பந்து நட்சத்திரம் கடும் கவலை

  • September 18, 2026
  • 0 Comments

தான் ஆயிரம் தடவைகள் இனவெறி அத்துமீறல்களுக்கு ஆளாகியுள்ளதாகவும், ஆனால் தாங்கள் டந்துகொள்ளும் விதம் இனவெறி சார்ந்தது என்பதை பலரும் உணர்வதில்லை என்றும் பார்ட்செலோனா Barcelona அணியின் முன்கள வீரர் லாமின் யமால் (Lamine Yamal) தெரிவித்துள்ளார். 19 வயதான இந்த இளம் நட்சத்திர வீரர், கால்பந்து உலகில் குறுகிய காலத்தில் அடைந்த அபார வளர்ச்சியின் போது பல்வேறு சந்தர்ப்பங்களில் இனவெறித் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளார். கடந்த 2024 அக்டோபரில் ரியல் மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியின் போது லாமின் […]

தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எவ்வித பிளவும் இல்லை என்றும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் எனக் கூறப்படுவதில் எந்தப் உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார். அரசியல் இலங்கை செய்தி

தேசிய மக்கள் சக்திக்குள் பிளவா?

  • September 18, 2026
  • 0 Comments

தேசிய மக்கள் சக்திக்குள் (NPP) எவ்வித பிளவும் இல்லை என்றும், பிரதமர் சுயாதீனமாக இயங்கவுள்ளார் எனக் கூறப்படுவதில் எந்தப் உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் வசந்த லால்காந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் மேலும் கூறியதாவது: “ஆரம்பத்தில் ஜனாதிபதியாருக்கும் பிரதமருக்குமிடையே மோதல் என்று கூறினார்கள். பின்னர் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையே முரண்பாடு என்றார்கள். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. தற்போது பிரதமர் குறித்து புதிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. […]