இலங்கை

சிறை கைதியுடன் தொலைபேசி உரையாடல்!! முஜிபுர் ரஹ்மானிடம் விசாரணை!

  • May 28, 2026
  • 0 Comments

கண்டி – போகம்பரை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள  கைதி ஒருவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் சுமார் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடியுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு துறையினர் அவரிடம் சுமார் 04 மணிநேரம் வாக்குமூலம் பெற்றதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் பாரதூரமான குற்றங்கள் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டவர் எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.  

error: Content is protected !!