இந்தியா செய்தி

ஐ.நாவின் செயல்திறன் சரிந்துவிடும்: இந்தியா எச்சரிக்கை!

  • May 15, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபையை மறுசீரமைப்பதற்குரிய காலம் கடந்துவிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கடும் விசனம் வெளியிட்டுள்ளார். பிரிக்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. மேற்படி அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இதில் கலந்து கொண்டனர். இதன்போது உரையாற்றுகையிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். “பாதுகாப்பு சபை உட்பட ஐநாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற […]

இலங்கை செய்தி

வடக்கில் ஆசிரியர் இடமாற்றத்தில் ஊழல்: யாழில் போராட்டம்!

  • May 15, 2026
  • 0 Comments

வடக்கு மாகாணத்தில் இடமாற்றச் சபையின் விதிகளை மீறி, அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறையற்ற ஆசிரியர் இடமாற்றங்களைக் கண்டித்து, யாழ். ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது திரளான ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த சங்கத்தின் செயலாளர் தீபன் திலீசன், “வடக்கு மாகாணக் கல்வியைத் திட்டமிட்டு அழிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி அரசும், ஊழல் கல்வி அதிகாரிகளும் […]

இந்தியா செய்தி

ஐக்கிய அரபு அமீரகத்துடன் முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

  • May 15, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையில் இன்று முக்கியமான சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பாவில் உள்ள நெதர்லாந்து, ஸ்வீடன், நோர்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான அரசமுறை பயணத்தை பிரதமர் மோடி இன்று ஆரம்பித்தார். இதற்கமைய முதலில் ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானைச் சந்தித்து பேச்சு நடத்தினார். இரு தரப்பு சந்திப்பின் முடிவில் […]

இலங்கை செய்தி

25 மில்லியன் ரூபா செலவில் நன்னீர் இறால் அபிவிருத்தி!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கையின் நன்னீர் இறால் வளர்ப்புத் துறையை நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக லாபகரமான வணிகத் துறையாக மாற்றியமைக்க, ஜனாதிபதியின் விசேட நிதியொதுக்கீட்டின் கீழ் புதிய புரட்சிகரமான திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட 25 மில்லியன் ரூபா நிதியைக் கொண்டு இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று இலங்கை தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கித்சிறி தர்மப்பிரிய தெரிவித்தார். பாரம்பரிய முறைகளுக்குப் பதிலாக, இப்புதிய திட்டத்தில் இறால் குஞ்சுகள் […]

இலங்கை செய்தி

இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்த ஏற்பாடு!

  • May 15, 2026
  • 0 Comments

  டிஜிட்டல் பொருளாதாரத்தின் தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கையில் PayPal மூலம் வழங்கும் சேவை வசதியை விரிவுபடுத்துவது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவின் தலைமையில் இன்று (16) முற்பகல் கொழும்பு கோல்ஃபேஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதுவரை காலமும் இலங்கையர்களின் PayPal கணக்குகள் “பணம் அனுப்புவதற்கு மாத்திரம்” (Send Only) வரையறுக்கப்பட்டிருந்ததுடன், இதன் மூலம் பயனாளிகள் வெளிநாடுகளுக்குக் கொடுப்பனவுகளைச் செய்ய முடிந்த போதிலும், சர்வதேச வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. […]

உலகம் செய்தி

ட்ரம்பின் விஜயத்தையடுத்து சீனாவில் களமிறங்குகிறார் புடின்!

  • May 15, 2026
  • 0 Comments

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் விரைவில் பெய்ஜிங்கில் சந்திக்கத் திட்டமிட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை அறிவித்துள்ளது. இந்த உயர்மட்ட சந்திப்பின் போது அமெரிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின், சீனப் பயணம் குறித்து இரு தலைவர்களும் கலந்துரையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே முடிவடைந்துவிட்டதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி சீனாவுக்கு விஜயம் செய்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதியும் அங்கு […]

இலங்கை செய்தி

10 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை: 112 வீடுகள் சேதம்!

  • May 15, 2026
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணம், புத்தளம் உட்பட 7 மாவட்டங்களில் நிலவும் கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆயிரத்து 151 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 623 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். 112 வீடுகள் பகுதியளவும், ஒரு வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளன. புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் வெள்ளத்தால் ஆயிரத்து 264 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பில் […]

இலங்கை செய்தி

கிழக்கிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி! வரலாற்று நினைவுகளை மீட்டெடுத்த மக்கள்!!

  • May 15, 2026
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு பாலத்தருகில் இறுதிப் போரில் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. இறுதிப் போரின் போது முள்ளிவாய்க்காலில் முற்றுகைக்குள் சிக்கி, உயிருக்குப் போராடிய மக்கள், உணவுத் தட்டுப்பாடு காரணமாகத் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு, உப்புக்கூட இல்லாமல் கஞ்சி காய்ச்சிப் பசியாறினர். அந்தத் துயரார்ந்த நாள்களையும், மக்களின் தியாகத்தையும் நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் மே மாதத்தின் இக்காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு எங்கும் கஞ்சி […]

ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

யூரோவிஷனை ஆளப்போகும் Delta Goodrem!

  • May 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியப் பாடகி Delta Goodrem, யூரோவிஷன் Eurovision பாடல் போட்டியில் தனது சிறப்பான பங்களிப்பால் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார். இவரது சமீபத்திய மேடைத் திறமை, இப்போட்டியில் ஆஸ்திரேலியா முதல் முறையாக வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை கணிசமாக அதிகரித்துள்ளது. புகழ்பெற்ற நடிகையாகவும் பாடகியாகவும் திகழும் இவர், தற்போது பந்தயக் களத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்து முதலிடத்தை நெருங்கி வருகிறார். 2015 முதல் இப்போட்டியில் பங்கேற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு, இவரது இந்த வளர்ச்சி ஒரு வரலாற்று சாதனையாக […]

ஆஸ்திரேலியா செய்தி

Neo-Nazi அமைப்புக்கு ஆஸ்திரேலியாவில் தடை விதிப்பு!

  • May 15, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் இயங்கும் நியோ-நாசிசம் (Neo-Nazi) அமைப்பை அந்த நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒரு வெறுக்கத்தக்க குழுவாக அறிவித்துள்ளது. இந்தத் தடையின் மூலம் அந்த அமைப்பிற்கு நிதி வழங்குவது, உறுப்பினர்களைச் சேர்ப்பது அல்லது பயிற்சியளிப்பது போன்ற செயல்கள் இனி கடுமையான குற்றங்களாகக் கருதப்படும். வெள்ளையின மேலாதிக்கக் கொள்கையைப் பரப்பும் இக்குழுவினர் வெவ்வேறு பெயர்களில் இயங்கினாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். வன்முறையைத் தூண்டும் இத்தகைய குழுக்களின் செயல்பாடுகளை முடக்கி, சமூக […]