ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணியை மீட்டுத் தருமாறு கோரிக்கை!!
திருகோணமலை மாவட்டத்தில் மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ரொட்டவெவ புளியங்குளம் வயல் காணியை மீட்டுத் தருமாறு அப்பகுதியிலுள்ள விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். 1977ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரை எமது மூதாதேயர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதனையடுத்து 1990ம் ஆண்டு யுத்தம் காரணமாக தங்களது வயல் காணிகளையும் வீடுகளையும் விட்டு அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில் தஞ்சம் புகுந்து மீண்டும் சில காலங்களுக்கு பின்னர் வருகை தந்தோம் எனவும் பாதிப்பட்டவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன் […]



