உலகம் செய்தி

அலி கமேனிக்கு 3 மாதங்களின் பின் இறுதிச் சடங்கு! தெஹ்ரானில் திரளும் 2 கோடி மக்கள்!!

  • June 3, 2026
  • 0 Comments

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்காக, மூன்று நாட்கள் பொது இறுதிச்சடங்கு நடத்தப்படவுள்ளது. ஈரான் அரச ஊடகங்கள் மேற்படி தகவலை உறுதிப்படுத்தியுள்ளன. இறுதிச்சடங்கு நிகழ்வுகள் தலைநகர் தெஹ்ரான், கொம் மற்றும் மஷாத் ஆகிய மூன்று முக்கிய நகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தெஹ்ரானில் 24 மணி நேர சிறப்பு அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமார் 2கோடி மக்கள் வரை கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஷாத் நகரில் உள்ள புகழ்பெற்ற இமாம் […]

இலங்கை செய்தி

ஆஸ்திரேலிய, இலங்கை வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு!

  • June 3, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனி வோங்கை Penny Wong சந்தித்து பேச்சு நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. இலங்கை, ஆஸ்திரேலியா இடையிலான மூலோபாய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, இந்தியப் பெருங்கடல் பிராந்திய பாதுகாப்பு, மற்றும் வர்த்தக-பொருளாதார கூட்டாண்மையை விரிவுபடுத்துவது குறித்தும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கு ஆஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சரால் நேற்று விருந்தோம்பலும் […]

இலங்கை செய்தி

உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயது இளைஞன் பலி: வவுனியாவில் சோகம்!

  • June 3, 2026
  • 0 Comments

வவுனியா, குறிசுட்டகுளம் – கனகராயன்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் சிக்குண்டு 20 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இக்கோரச் சம்பவத்தில் குறிசுட்டகுளம், கனகராயன்குளத்தைச் சேர்ந்த கணேசன் குகப்பிரியன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவராவார். நேற்று செவ்வாய்க்கிழமை குறிசுட்டகுளம் பகுதியில் அமைந்துள்ள காளி கோயிலில் திருப்பணிகளை மேற்கொள்வதற்காக உழவு இயந்திரத்தை இயக்கிய போதே இவ்விபத்து நேர்ந்துள்ளது. இதன்போது, எதிர்பாராதவிதமாக உழவு இயந்திரத்தின் இயந்திரப் பகுதிக்குள் தவறி விழுந்ததில், அதில் சிக்குண்டு அந்த இளைஞர் சம்பவ […]

இலங்கை செய்தி

செம்மணியில் மேலும் 8 என்புத் தொகுதிகள் அடையாளம்!

  • June 3, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 14ஆம் நாள் அகழ்வாய்வு நேற்று முன்னெடுக்கப்பட்ட போது, ஒரே இடத்தில் ஒன்றன் மீது ஒன்றாகப் புதைக்கப்பட்ட இரு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளிட்ட மேலும் பல மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்றைய அகழ்வின் போது குழந்தை ஒன்றினது எலும்புக்கூட்டுத் தொகுதியும், சிறுவர் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் எலும்புக்கூட்டுத் தொகுதி உட்படப் புதிதாக 8 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, சுத்தம் செய்யப்பட்ட பின்னர் […]

உலகம் செய்தி

பாதுகாப்புத்துறை ஏற்றுமதியில் சாதனை படைத்த இஸ்ரேல்!

  • June 2, 2026
  • 0 Comments

இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதி 2025 ஆம் ஆண்டில் $19.2 பில்லியன் என்ற முன்னெப்போதும் இல்லாத புதிய சாதனையை எட்டியுள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த விற்பனை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது என தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக இஸ்ரேலின் ஏவுகணைகள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போதைய போர்க்களங்களில் இந்தத் தொழில்நுட்பங்கள் வெற்றிகரமாகச் செயல்படுவதால், சர்வதேச அளவில் இவற்றுக்கான தேவை கணிசமாக உயர்ந்துள்ளது என போர் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பா மற்றும் […]

இலங்கை செய்தி

அமெரிக்காவால் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள் கொழும்பு வந்தன!

  • June 2, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படைக்கு, அமெரிக்கா கடற்படையால் வழங்கப்பட்ட TH-57 ‘Sea Ranger பல்நோக்கு ஹெலிகாப்டர்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட ஹெலிகாப்டர்கள் தற்போது, இரத்மலானவில் உள்ள விமானப்படைத் தளத்தில் தொழில்நுட்பக் கட்டமைப்பு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. தேவையான ஆய்வுகள், ஏற்பு நடைமுறைகள் மற்றும் சோதனைப் பறப்புகள் நிறைவடைந்த பின்னர், இவை சேவையில் சேர்க்கப்பட்டு செயற்பாட்டுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் என இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த உதவியானது இலங்கைக்கும், அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க […]

இலங்கை செய்தி

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு: இணையவழி சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி!

  • June 2, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களான லலித் மற்றும் குகன் ஆகிய இருவர் தொடர்பான வழக்கில், நிகழ்நிலை ஊடாகத் தோன்றிச் சாட்சியமளிப்பதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் தினமான டிசம்பர் மாதம் 10ஆம் திகதி, யாழ்ப்பாண நகரில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது போராட்டத்தை ஒழுங்கமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்த லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர், […]

உலகம் ஐரோப்பா செய்தி

போரில் பங்கேற்கமாட்டோம்: ஸ்பெயின் மீண்டும் திட்டவட்டம்!

  • June 2, 2026
  • 0 Comments

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகளில் ஸ்பெயின் ஒருபோதும் பங்கேற்காது என்று அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் Jose Manuel மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். தற்போதைய பதற்றமான சூழலுக்கு ராணுவ ரீதியான தீர்வு ஏதுமில்லை என்றும், போரைத் தவிர்த்து சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் செயல்படுவதே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறையைத் தூண்டும் செயல்கள் உலகளாவிய குழப்பத்திற்கே வழிவகுக்கும் என்பதால், இந்த மோதலில் இருந்து ஸ்பெயின் விலகி இருக்க முடிவு செய்துள்ளது. ஏற்கனவே இஸ்ரேலுடனான தனது தூதரக உறவுகளைத் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

சமரச முயற்சி தோல்வி: பாஜகவில் இருந்து வெளியேறுகிறார் அண்ணாமலை!

  • June 2, 2026
  • 0 Comments

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இதன்போது பாஜகவில் இருந்து தான் விலகுவதற்கான காரணம் குறித்து அவர் விளக்கமளித்துள்ளார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்ணாமலை பாஜகவில் இருந்து விலக உள்ளதாக கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவரது ஆதரவாளர்கள் ‘தலைவா வா! தரணி ஆள வா!’ என கோவை மாநகரின் பல பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். […]

இலங்கை செய்தி

பாதுகாப்பு பிரதி அமைச்சர் திருமலை விஜயம்: காணி விடுவிப்பு குறித்து ஆராய்வு!

  • June 2, 2026
  • 0 Comments

பாதுகாப்புப் பிரதியமைச்சர் அருண ஜயசேகர இன்று முதன்முறையாகத் திருகோணமலை மாவட்டத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின்போது அவர் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்ததுடன், சில அவசரத் தேவைகளுக்கான உடனடித் தீர்வுகளையும் வழங்கினார். இதன்போது, திருகோணமலை மாவட்டத்தில் முப்படையினரால் பாதுகாப்புத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ள, பொதுமக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகளை மீள ஒப்படைப்பது தொடர்பான பிரதான கோரிக்கைகள் பிரதியமைச்சரிடம் விரிவாக முன்வைக்கப்பட்டன.   இவ்விடயம் குறித்துப் பாதுகாப்புத் தரப்பினருடன் […]