உக்ரைனின் 376 ட்ரோன்களை அழித்த ரஷ்ய வான் படை!
ரஷ்யாவின் பிரதான நகரங்களில் ஒன்றான St Petersburg மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை இலக்கு வைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், முக்கிய எண்ணெய் கிடங்கும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. ரஷ்ய வான் பாதுகாப்புப் படையினர் , 376 உக்ரைனிய ட்ரோன்களை இடைமறித்து அழித்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சென் பீட்டர்ஸ்பர்க் நகரைச் சூழ்ந்துள்ள Leningrad பிராந்தியத்தில் மாத்திரம் 140 இற்கும் மேற்பட்ட ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அப்பிராந்திய ஆளுநர் Aleksandr Drozdenko உறுதிப்படுத்தியுள்ளார். […]













