புகலிடம் கோருவோருக்கு நெருக்கடி : ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய விதிகள் நடைமுறைக்கு!
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கை மீதான கட்டுப்பாடுகள் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. புதிய கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் குடியேற்றத் தலைவர் மேக்னஸ் புரூனர், “முதல் முறையாக, எங்களிடம் ஒரு விரிவான ஐரோப்பிய அமைப்பு உள்ளது,” எனக் கூறினார். மேலும், இந்த சீர்திருத்தம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு அவற்றின் எல்லைகள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய சீர்திருத்தங்களுக்கு அமைய, எல்லை சோதனைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் சட்டவிரோதமாக […]




