ரஷ்யாவில் பணிப்புரிந்த இந்திய தொழிலாளர் பலி!! மேலும் மூவர் படுகாயம்!
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்திய தொழிலாளர் உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் குறித்த நான்குபேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்த மற்ற மூவரும் இந்திய நாட்டவர்களே என்றும் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. “தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



