மிதமிஞ்சிய வெப்பம் : தடை செய்யப்பட்ட நீர்நிலைகளை நாடும் பிரான்ஸ் மக்கள்!
பிரான்ஸில் கடுமையான வெப்பநிலை நிலவி வருகிறது. இதன் காரணமாக சுமார் 09 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நீந்துவதற்கு நீண்டகாலமாக தடைவிதிக்கப்பட்டிருந்த செயிண்ட்-மார்ட்டின் கால்வாய்க்கு மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்வதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்று, பாதுகாப்பு விதிகள் குறித்த நினைவூட்டல்களை வழங்கியுள்ளனர். இருப்பினும் காவல்துறையினரின் அறிவுறுத்தலையும் புறக்கணித்து அங்கு ஏராளமானோர் நீரில் இறங்கி குளித்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஐரோப்பா முழுவதும் சக்திவாய்ந்த வெப்ப குவிமாடம் சூழ்ந்துள்ளமையினால் பல இடங்களில் உச்சபட்ச வெப்பநிலை […]




