கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும் மின்சார சபைக்கு ரூ. 38.7 பில்லியன் நட்டம்
மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்ட போதிலும், கடந்த 2025ஆம் ஆண்டில் இலங்கை மின்சார சபை நட்டமடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த 2025ஆம் ஆண்டு இறுதியில் மின்சார சபையின் மொத்த நட்டம் 38.7 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் பலமுறை மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலும் கட்டணங்கள் மேலும் 20 சதவீதத்தால் குறைக்கப்பட்டன. இக்கட்டணக் […]




