உக்ரைனுக்கு ஆதரவாக போரிட்ட பிரித்தானிய பிரஜை உயிரிழப்பு!
உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் இடம்பெற்று வரும் போரில் பிரித்தானிய பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 23 வயதான அய்ர்டன் ரெட்ஃபியர்ன் (Ayrton Redfearn) என அடையாளம் காணப்பட்டுள்ளார். ரெட்ஃபியர்ன், இதற்கு முன்னர் டார்குவே விமானப் படை மாணவராகவும், ராயல் ஏர் ஃபோர்ஸிலும் (RAF) பணியாற்றியுள்ளார். அவர் 2025 ஆம் ஆண்டில் உக்ரைனிய இராணுவத்திற்கு ஆதரவளிக்கும் ஒரு சிறப்புப் பிரிவில் இணைந்திருந்தார். இதேவேளை அவரின் மரணத்தை வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இரங்கல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




