ஐரோப்பா

ஜெட் எரிபொருள் பற்றாக்குறை : விமான இரத்து குறித்து எச்சரிக்கை!

மத்திய கிழக்கு மோதல் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது விமான சேவையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பாவிடம் ஆறு வாரங்களுக்கு மட்டுமே போதுமான ஜெட் எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் விரைவில் விமான ரத்துகள் ஏற்படக்கூடும் என்று சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) நிர்வாக இயக்குனர் ஃபாத்திஹ் பிரோல் (Fatih Birol) எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தனது பிடியை இறுக்கமாக வைத்துள்ளது. இது “நாம் இதுவரை சந்தித்ததிலேயே மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியை” தூண்டுகிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், விமான இரத்துக்கள் தவிர்க்க முடியாததாகுவதாக தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு எரிசக்தி விநியோகத்தை பெரிதும் சார்ந்துள்ள ஜப்பான், இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகள் “முன்களத்தில்” உள்ளன என்றும், இந்த அழுத்தம் விரைவில் “ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கும் வரும்” என்றும் அவர் மேலும்  குறிப்பிட்டுள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!