மத்திய கிழக்கு

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் பலியான சூடானின் மிகப்பெரிய பாடகி

சூடானின் மிகப்பெரிய பாடகர்களில் ஒருவரான ஷேதன் கார்டூட்(37) துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சூடான் ராணுவத்திற்கு துணை ராணுவப்பிரிவுக்கும் இடையேயான மோதலில் பாடகி கார்டூட் கொல்லப்பட்டுள்ளார் என்றே கூறுகின்றனர். சூடானில் இரு பிரிவினருக்குமான மோதலில் சிக்கிக்கொண்டுள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க ஒப்பந்தம் கையெழுத்தான அடுத்த நாளே பாடகி துப்பாக்கிச் சூட்டில் பலியாகியுள்ளார்.

அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் ஏப்ரல் மாதம் தொடங்கி சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் பிரிவுக்கும் கடுமையான சண்டை நடந்து வருகிறது. சமீப நாட்களாக துணை ராணுவத்தின் ஆதிக்கம் அதிகரித்து காணப்பட்ட al-Hashmab பகுதியில் பாடகி கார்டூட் வசித்து வந்துள்ளார் என்றே கூறப்படுகிறது.

சூடானின் மிகப்பெரிய பாடகி துப்பாக்கிச் சூட்டில் மரணம்

பாடகி கார்டூட் மரணமடைந்ததை அவரது உறவினர் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். சூடானில் சண்டை துவங்கிய நாட்களில் இருந்தே பாடகி கார்டூட் காணொளிகளை பதிவு செய்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்துள்ளார்.

மட்டுமின்றி போருக்கு எதிராக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தும் வந்துள்ளார். சூடானில் ஏற்பட்டுள்ள இந்த சண்டையில் இதுவரை 600க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுமார் 4,000 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். மேலும், உணவு தண்ணீர் மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் பற்றாக்குறை காரணமாக 80 சதவீத மருத்துவமனைகள் மூடப்படும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Mithu

About Author

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.