உலகம் செய்தி

சூடான் உள்நாட்டு மோதல் – ஆயுத விநியோகத்தை முடக்க அமெரிக்கா வலியுறுத்தல்!

சூடானின் துணை ராணுவப் படையான விரைவு ஆதரவுப் படைகளுக்கு (RSF) ஆயுதங்கள் வழங்குவதைத் தடுக்க சர்வதேச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) அழைப்பு விடுத்துள்ளார்.

கனடாவில் நடந்த G7 வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் முடிவில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

RSF பொதுமக்களுக்கு எதிராக கொலை, கற்பழிப்பு மற்றும் பாலியல் வன்முறை உள்ளிட்ட திட்டமிட்ட அட்டூழியங்களைச் செய்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

சூடானில் துணை இராணுவ படையினருக்கும், இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு மோதல் இடம்பெற்று வருகிறது.

துணை இராணுவ படையினருக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆயுதங்களை விநியோகிப்பதாக இராணுவம் குற்றம் சாட்டி வருகிறது. இருப்பினும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அந்த கூற்றுக்களை மறுத்து வருகிறது.

சூடானில் மனிதாபிமான போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா முன்மொழிந்துள்ளது. இருப்பினும் இந்த முன்மொழிவுகளை துணை இராணுவ படையினர்  மீறியுள்ளனர்.

இந்நிலையிலேயே மார்கோ ரூபியோவின்  (Marco Rubio) கருத்துக்கள் வந்துள்ளன.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி