இந்தியா செய்தி

வீதியில் சென்ற சிறுவனை கடித்து குதறிய தெரு நாய்கள்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் நேற்று மாலை தெருநாய்கள் கடித்ததில் ஏழு வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவன் சாக்லேட் வாங்க வெளியே சென்றதாகவும், அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நாய்களை விரட்டியதாகவும் வைத்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, விராட் என்ற இந்த குழந்தையை ஐந்து நாய்கள் சுற்றி வளைத்த அதிர்ச்சி சம்பவமும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.

அந்தக் காட்சிகளில் காட்டப்பட்டுள்ளபடி, குழந்தை தப்பிக்க முயலும் போது, ​​நாய்கள் கூட்டம் சுற்றி வளைத்து, தரையில் இழுத்துச் சென்று கடித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவத்தில், குழந்தை பலத்த காயம் அடைந்து, அதிர்ச்சியில் இருந்ததாக கூறப்படுகிறது.

இது போன்ற சூழல்கள் இந்த பகுதியில் அடிக்கடி நடப்பதால், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விராட்டின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி