ஐரோப்பா செய்தி

எப்ஸ்டீன் விவகாரத்தில் மண்டேல்சனின் பொய்களை நம்பியதற்கு வருந்துகிறேன் – பிரதமர் கவலை

பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களிடம் பிரதமர் கியர் ஸ்டார்மர்,  வருத்தம் தெரிவித்தார்.

கிழக்கு சசெக்ஸில் நடந்த நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளார்.

முன்னாள் தொழிற்கட்சி உறுப்பினர் லார்ட் மண்டேல்சன் சொன்ன பொய்களை நான் நம்பியதற்கு வருந்துகிறேன்” என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்மர் தனது “பிரைட் இன் பிளேஸ்” திட்டம் குறித்து பேச திட்டமிட்டிருந்தார். ஆனால், லார்ட் மண்டேல்சனைச் சுற்றியுள்ள சர்ச்சை காரணமாக, உரையின் தொடக்கமே அந்த விவகாரமாக மாறியது.

ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் மண்டேல்சனுக்கு இருந்த உறவின் “ஆழமும் இருளும்” எவ்வளவு என்பது யாருக்கும் முழுமையாக தெரியாது என்று பிரதமர் தெரிவித்தார்.

மேலும், 2024 ஆம் ஆண்டு மண்டேல்சன் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டபோது, அவர் உண்மையை மறைத்து பொய் கூறியதாகவும் ஸ்டார்மர் மீண்டும் குற்றம் சுமத்தினார்.

நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர், 2019 ஆம் ஆண்டு உயிரிழந்த குழந்தை பாலியல் குற்றவாளியான எப்ஸ்டீனுடன் மண்டேல்சனுக்கு “தொடர்ச்சியான நட்பு” இருந்தது குறித்து தனக்குத் தெரியும் என்றும் கூறினார். இது அரசியல் ரீதியாக அழுத்தமான சூழலில் பிரதமர் வெளிப்படையாக பேசியதாகக் கருதப்படுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவிக்க லார்ட் மண்டேல்சன் மறுத்துள்ளார். அவர் எந்த விதமான குற்றவியல் செயலில் ஈடுபடவில்லை என்றும், நிதி லாபம் எதற்காகவும் செயல்படவில்லை என்றும் அவரது நிலைப்பாட்டை பிபிசி தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி