இலங்கை

ஆசிய நாடுகளிலேயே அதிக சரிவை கண்ட இலங்கை ரூபாய்!! பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்பு!

ஆசியாவிலேயே மிக மோசமாகச் செயல்பட்ட நாணயமாக  இலங்கை ரூபாய் அடையாளம் காணப்பட்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் முன்னணியில் உள்ள வர்த்தக செய்தித் தளம் வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ரூபாயின் தொடர் வீழ்ச்சியானது பணவீக்கத்தை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதைத் தடுக்க தற்போதைய அரசாங்கத்திடம் முறையான வழிமுறை எதுவும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணநாயக்க குற்றம் சாட்டினார்.

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்தாவும் தெரிவித்தார்.

இப்பிரச்சினை குறித்த கவலைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி தற்காலிகமானதே என்றும், பொதுமக்கள் இச்சூழ்நிலையை மனவுறுதியுடன் எதிர்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க நேற்று தெரிவித்திருந்தார்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்