இலங்கை

இலங்கை – பெண் பொலிஸை வன்புனர முயன்ற கான்ஸ்டபிள் கைது

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்ற குற்றத்தின் பேரில், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், மாங்குளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும், மாங்குளம் பொலிஸ் விசேட அதிரடிப்படைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கரையோரப் பொலிஸாரின் மகளிர் படைமுகாமிற்கு இன்று அதிகாலை அத்துமீறி நுழைந்த குறித்த கான்ஸ்டபிள், அங்கு உறங்கிக்கொண்டிருந்த பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வன்புனர முயன்றுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்