இலங்கை செய்தி

இலங்கை: பேஸ்புக் விருந்தில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது

கம்பஹா, நீர்கொழும்பு மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட கூட்டு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பேஸ்புக் விருந்து ஒன்றில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்ட 14 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவத்த நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விருந்துக்கு பல பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் வருகை தந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

விருந்தில் இணைந்த இளைஞர்கள் குழுவொன்று விடுதியில் அறைகளை முன்பதிவு செய்து, அறைகளுக்குள் சட்டவிரோத போதைப்பொருளை பயன்படுத்திய போது மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் ஐஸ், கொக்கேன் போன்ற போதைப் பொருட்களை பயன்படுத்தியது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 முதல் 30 வயதுடையவர்கள் என மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை