ICCயின் ஆகஸ்ட் மாத சிறந்த வீரர்களான இலங்கை அணி வீரர்கள்
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது.
அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ICC அறிவித்திருந்தது.
அதில் வீரர்கள் பட்டியலில் வெஸ்ட் இண்டீசின் ஜெய்டன் சீல்ஸ், தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மஹராஜ், இலங்கையின் துனித் வெல்லாலகே ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் ஆகஸ்ட் மாத சிறந்த வீரராக துனித் வெல்லாலகே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதத்திற்கான சிறந்த வீராங்கனையை தேர்வு செய்ய வெளியிட்ட பரிந்துரை பெயர் பட்டியலில் இலங்கையின் ஹர்ஷிதா மாதவி, அயர்லாந்தின் கேபி லூயிஸ், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இவர்களில் சிறந்த வீராங்கனையாக ஹர்ஷிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.