இந்தியா செய்தி

சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம்

78 வயதுடைய காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக்குறைவால் கடந்த 15ந்தேதி டெல்லியில் உள்ள கங்காராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வயிறு தொடர்பான பிரச்சினை அவருக்கு இருந்தது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இதில் உடல்நிலை சீரானதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் 17ந்தேதி அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில், வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றார். அவருக்கு டாக்டர்கள் அமிதாப் யாதவ், டாக்டர் நந்தினி ஆகியோர் சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரி தலைவர் அஜய் சுவரூப் தெரிவித்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கங்காராம் வைத்தியசாலை தலைவர் அஜய் சுவரூப், “சோனியா காந்தி தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். வயிறு தொடர்பான பிரச்சினை காரணமாக அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தகுந்த சிகிச்சையை வழங்கினர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. மேலும் வெளிநோயாளி என்ற அடிப்படையில் சோனியா காந்தியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி