உலகம் செய்தி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான பொருட்களுக்கு நிலையான கட்டணம் விதிக்க முன்மொழிவு!

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறைந்த மதிப்புள்ள ஆர்டர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கட்டணம் விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்துள்ளது.

இன்று இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைச்சர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி நுகர்வோருக்கு நேரடியாக இறக்குமதி செய்யப்படும் 150 யூரோவிற்கு குறைந்த விலையுள்ள  பொருட்களுக்கு  வரி விதிக்கப்படாது. அதற்கு பதிலாக நிலையான கட்டணங்கள் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றிய கூட்டத்தில் ,   சிறிய பொட்டலங்களுக்கு இரண்டு யூரோ நிலையான கட்டணத்தை விதிக்க முன்மொழியப்பட்டது.

இதற்கமைய மேற்படி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் மரோஸ் செஃப்கோவிக் (Maros Sefcovic) அடுத்த ஆண்டுக்கான தற்காலிக தீர்வுக்கு உடன்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

வேகமாக மாறிவரும் வர்த்தக யதார்த்தங்களை எதிர்கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் தனது நிலைப்பாட்டை வலுப்படுத்துவதை உறுதி செய்வதில் இது ஒரு முக்கியமான படியாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி