இலங்கை செய்தி

நயினை அம்மனையும் வழிபட்ட ஜனாதிபதி!

யாழ்ப்பாணத்துக்கு நேற்று சென்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றார்.

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொங்கல் விழாக்களில் நேற்று ஜனாதிபதி பங்கேற்றதுடன், மக்களுடனும் சந்திப்புகளை நடத்தி இருந்தார்.

இன்று வீடமைப்பு திட்டத்தை ஆரம்பித்து வைத்ததுடன், ஆன்மீக வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.

நயினாதீவுக்குக் விமானத்தில் சென்ற ஜனாதிபதி, நாக விகாரையில் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.

தையிட்டி உட்பட முக்கிய சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார் என தெரியவருகின்றது.

அதன்பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

அமைச்சர்களான இராமலிங்கம் சந்திரசேகர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால உள்ளிட்டவர்களும் சென்றிருந்தனர்.

வடக்கு விஜயத்தை முடித்துக்கொண்டு இன்று மாலை ஜனாதிபதி கொழும்பு திரும்புவார் என தெரியவருகின்றது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை