இந்தியா பொழுதுபோக்கு

பிரபல நடிகர் ஹோட்டலில் மர்ம மரணம் !! அனைவருக்கும் அதிர்ச்சி

மராட்டியத்தின் நாசிக் நகரில் இகத்பூரி பகுதியில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த பிரபல தொலைக்காட்சி நடிகர் நித்தேஷ் பாண்டே திடீரென மரணமடைந்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், ஓட்டல் பணியாளர்கள் மற்றும் அவருக்கு நெருங்கியவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், முதல் கட்ட விசாரணையில், மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து இருக்க கூடும் என காவல் அதிகாரிகள் கூறியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிவுக்காகவும் காத்திருக்கிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.

நடிகர் நித்தேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளான, ‘மஞ்சிலின் அபானி அபானி’, ‘அஸ்தித்வா… ஏக் பிரேம் கஹானி’, ‘சாயா’, ‘ஜஸ்தாஜூ’ மற்றும் ‘துர்கேஷ் நந்தினி’ போன்றவற்றில் நடித்து உள்ளார்.

இதுதவிர, அவர் ‘ஓம் சாந்தி ஓம்’, ‘கோஸ்லா கா கோஸ்லா’, ‘பதாய் தோ’, ‘ஷாதி கே சைட் எபெக்ட்ஸ்’ மற்றும் ‘ரங்கூன்’ உள்ளிட்ட படங்களிலும் பணியாற்றியுள்ளார். ‘ஆஸ்தா’ மற்றும் ‘மிசல் பாவ்’ போன்ற நாடக நிகழ்ச்சிகளிலும் நித்தேஷ் பணியாற்றி உள்ளார்.

சமீபத்தில் தொலைக்காட்சி நடிகர் ஆதித்யா சிங் ராஜ்புத் மற்றும் நடிகை வைபவி உபாத்யாய் ஆகியோர் மறைந்த நிலையில், இவரும் மறைந்தது தொலைக்காட்சி துறையினரிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

MP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே