பொழுதுபோக்கு

குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து.. பிரபல நடிகை நெகிழ்ச்சி!

தென் கொரிய நாட்டின் ஜனாதிபதி லீ ஜே மியங் உடன் நடிகை பிரியங்கா மோகன் இருக்கும் படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

கார்த்திக் இயக்கத்தில், பிரியங்கா மோகன் நடிப்பில் நேரடியாக நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘மேட் இன் கொரியா’ மார்ச் 12 ஆம் திகதி வெளியானது.

தமிழ்நாட்டில் இருந்து தென் கொரியா வரை செல்லும் செண்பாவின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த கதை நடிகர்களின் திறமையான நடிப்பு, அதன் அழகான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைக்களம் என்பன பலரின் பாராட்டுகளை பெற்றது.

இந்த படத்தில் பிரியங்கா மோகன் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், தென்கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங் இந்தியா வந்து இருக்கும் நிலையில், அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் விருந்து வழங்கப்பட்டது.

இந்த விழாவில் ‘மேட் இன் கொரியா’ படத்தில் நடித்த நடிகை பிரியங்கா கலந்து கொண்டுள்ளார்.

இந்த விழாவில் நடிகை பிரியங்கா மோகனுக்கு அழைப்பு வந்த நிலையில், அவர் கலந்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதை தனக்கு கிடைத்த கௌரவமாக கருதுகிறேன்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியங் ஆகியோரின் முன்னிலையில் இந்த விருந்து நடைபெற்றது என புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த பலரும் பிரியங்கா மோகனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Mahi

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
error: Content is protected !!