ஆசியா

ட்ரோன் மூலம் இந்தியாவிற்கு போதைப் பொருள் கடத்தும் பாகிஸ்தான்!

ஐஎஸ்ஐஎஸ் மூலம் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவதாக தேசிய அகாலி தளத்தின் தலைவர் பரம்ஜித் சிங் பம்மா குற்றம் சாட்டியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்,  ட்ரோன்கள் மூலம் இந்தியாவுக்கு அந்நாடு போதைப்பொருளை அனுப்புவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்  பாகிஸ்தான் இந்தியாவுடன் நட்புறவாக இருப்பதாகக்காட்டிக்கொள்கிறது  ஆனால் மூத்த காலிஸ்தானி தீவிரவாதிகளுக்கு அவர்களின் மண்ணில் பாதுகாப்பு அளிக்கிறது.

குறிப்பாக பிலாவல் பூட்டோ ஜர்தாரியின் சமீபத்திய இந்திய வருகைக்குப் பிறகு  இந்த விவகாரங்களில் பாகிஸ்தான் சமீப காலங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

வாத்வா சிங்,  ரஞ்சித் சிங் நீதா,  லக்வீர் சிங் ரோட் போன்ற மூத்த காலிஸ்தானி போராளிகளின் முக்கியத்துவத்தை பாகிஸ்தான் இப்போது உணர்ந்துள்ளது.

ஹர்விந்தர் சிங் ரிண்டா போன்ற பிற இளைஞர்களின் ஈடுபாட்டுடன்,  பாகிஸ்தான் பாதுகாப்பு நிறுவனம் ஆளில்லா விமானங்களின் உதவியுடன் இந்தியாவுக்கு போதைப்பொருட்களை அனுப்புகிறது என்றார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்